districts

img

தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

 திருநெல்வேலி, ஆக 25- மருத்துவ காப்பீட்டு திட்டத் தை அமல்படுத்த வேண்டும், 58 மாத டி.ஏ உயர்வு வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்க ளின் நிலுவைகள் வழங்கப்பட வேண்டும், ஒப்பந்த உயர்வு படி பென்சன் வழங்க வேண்டும், மோட்டார் வாகனச் சட்ட திருத் தத்தை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை  வலி யுறுத்தி நெல்லை பகுதியில் இருந்து 3000 தபால் கார்டுகள் தமிழக முதல்வருக்கு அனுப்பு வது என ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கம்( ரேவா)  முடிவு செய்தது.   அதன் அடிப்படையில் செவ் வாய்க்கிழமை அன்று அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் வண்ணார் பேட்டை அஞ்சலகம் முன்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை தபால்களை அனுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக தொழி லாளர் சங்க( ரேவா)  செயலாளர் முத்துகிருஷ்ணன்  தலைமை தாங்கினார் ,அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற சங்க (ரேவா) செயலாளர் வெங்க டாசலம் துவக்கி வைத்தார், இந்த போராட்டத்தில் மாரிமுத்து, சுப்பையா, வீர ராமன், நடராஜன், ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.