சென்னை:
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் அனுப்பி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கு 12250.50 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை உள்ளது என்று கூறிஉள்ளார். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி வரும் ஆண்டுகளிலும் இழப்பீட்டுத்தொகையை மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.