tamilnadu

எளமரம் கரீம் எம்.பி., கடிதம் ... 1ஆம் பக்கத் தொடர்ச்சி

இவற்றிலிருந்து விமானங்களை இயக்குவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள கட்டிடங்களை தங்குவதற்காகப் பயன்படுத்துதல், வணிக வளாகங்களாகப் பயன்படுத்துதல் போன்று பல்வேறு வடிவங்களிலும் பயன்படுத்தி வருவாய்கள் ஈட்டப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் அரசாங்கத்திற்கு எவ்விதமான ஆதாயமுமில்லாமல் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க முன்வந்திருக்கிறார்கள். நாட்டிலுள்ள ஏஏஐசட்டத்தின் பல்வேறுபிரிவுகள் மீறப்பட்டிருக்கின்றன. அதானி நிறுவனத்திற்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைப்பது என்பது நிச்சயமாகஇச்சட்டத்தின் 21ஆவது பிரிவை மீறும் செயலாகும். அதேபோன்றே விமான விதிகள் (Aircraft Rules) பலவற்றையும் மீறி இவ்வாறு விமான நிலையங்கள் ஒப்படைக்கப்படுகின்றன. இவற்றை பிபிபிஏசிகூட்டத்தில் பல உறுப்பினர்கள் எடுத்துச்சொன்னபோதும், அரசுத்தரப்பில் இவற்றைக் கண்டுகொள்ளாமல், கட்டாயப்படுத்தி, இவ்வாறு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இவ்வாறு அதானி நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து, தாங்கள் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும்.இவ்வாறு இந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்காக பிற்போக்கு சக்திகள்ஏதேனும் செயல்பட்டிருக்கிறதா என்று கண்டறிந்து அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திடவும் தாங்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு எளமரம் கரீம் கடிதத்தில் கோரியுள்ளார். (ந.நி.)