காவல்துறை அறிவிப்பு
நாகர்கோவில், ஜன.10- குமரி கேரள எல்லைப்பகுதியான படந்தாலு மூடு பகுதியில் காவல் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் வெள்ளியன்று இரவு பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்ப ட்டார். அவரது உடல்முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்ப ட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி உட்பட பல உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், வில்சனை கொன்றுவிட்டு தப்பி ஓடிய இரண்டுபேரின் உருவங்கள் அருகிலிருந்த மசூதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் உதவி ஆய்வாளரை கொலை செய்தவர்கள் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (25), நாகர்கோவில் பகுதியைச்சேர்ந்த தவ்பிக் (27) ஆகிய இரண்டு பேர்என காவல் துறையினர் அடையாளம் கண்டனர். இந்த இரண்டு பேருக்கும் தீவிரவாதி களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்துல் சமீம் மற்றும்தவ்பீக் ஆகியோர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ ர்கள் வில்சனை கொலை செய்ய பயன்படுத்தியது 7.65 மி.மி ரக கள்ள துப்பாக்கி எனவும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரின் புகைப்ப டத்தை வெளியிட்ட குமரி காவல் துறையினர் அவர்களை தேடி வந்தனர். மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கேரள மாநில காவல் துறையினரும் இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கப்படும் அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இதுபோல குமரி காவல் துறை யினர் 2 லட்சம் அறிவித்துள்ளதுடன் தகவல் தெரி விப்பவர் இரகசியம் காக்கப்படும் என்று உறுதி யளித்துள்ளனர். மேலும் திருவனந்தபுரம் அருகில் உள்ள பூந்துறை என்ற பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில் கேரள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல குமரி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோ ரை பிடித்து தனித்தனி இடங்களில் வைத்து காவல் துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.