திருச்சிராப்பள்ளி, ஜூலை 4- திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் விடத்திலாம்பட்டி பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந் தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இதை யொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிளை செயலாளர் சுப்ரமணி தலைமையில் வியாழனன்று அப்பகுதி மக்கள் காலிகுடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து நகராட்சி பொறியா ளர் மனோகரன் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மணப்பாறை வட்டசெயலாளர் ராஜ கோபால், வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், பாலு மூத்தத் தோழர்கள் இளமாறன், நடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், உடனடியாக லாரி கள் மூலம் தண்ணீர் வழங்குவது. 2 நாளுக்குள் போர்வெல் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவானது. இதனையடுத்து போராட் டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.