tamilnadu

img

பட்டுக்கோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு

பட்டுக்கோட்டையில் தமுஎகச கலை இலக்கிய இரவு'

தஞ்சாவூர், ஏப்.15-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்  சார்பில், மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் 96 ஆவது பிறந்தநாள் விழா, 44 ஆவது கலை இலக்கிய இரவு திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, திங்கள்கிழமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டபத்தில் மக்கள் கவிஞர் சிலைக்கு என்.சி.இரத்தினவேலு தலைமையில், தமுஎகச கிளை துணைத்  தலைவர் க.கிருஷ்ணமூர்த்தி மாலை  அணிவித்தார். மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தி லிருந்து அலங்கார வாகனத்தில், ஐம்பெரும் ஆளுமைகள் பாரதியார்,  பாரதிதாசன், மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம், கவிஞர் தமிழ் ஒளி, நாட்டியப்  பேரொளி பாலசரஸ்வதி உருவப்படங் களுடன் சிலம்பாட்டம், பொய்க்கால் ஆட்டம், சுருள், வாள் வீச்சு, தப்பாட்டத்துடன் தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் சா.ஜீவபாரதி துவக்கி  வைக்க, தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் கோ.ஆறுமுகம் தலைமை யில் கலை இலக்கியப் பேரணி நடைபெற்றது. தொடர்ந்து சமூக நீதிப் போராளி கள், தந்தை பெரியார் சிலைக்கு வீ.சாமிநாதன், மக்கள் கவிஞர் சிலைக்கு தமிழவன், பட்டுக்கோட்டை அழகிரி சிலைக்கு கண.கேசவன், டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு கவிஞர்  பா.மனோஜ் தலைமையில் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.  மாலை 6 மணிக்கு கவிஞர் நந்த லாலா, கவிஞர் நாறும்பூ நாதன், கரிசல் குயில் கிருஷ்ணசாமி நினை வரங்கில், கலை இலக்கிய இரவு, கிளைத் தலைவர் முருக. சரவணன் தலைமையில் துவங்கியது. கிளைச் செயலாளர் மோரீஸ் அண்ணாதுரை வரவேற்றார். தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் துவக்கி  வைத்து பேசினார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி உதவிப் பேரா சிரியர் மருத்துவர் க. பாரதிராஜா வாழ்த்திப் பேசினார். ஒடிசா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர், வரலாற்று ஆய்வாளர் ஆர். பால கிருஷ்ணன், “சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும்” என்ற தலைப்பிலும், கவிஞர் கே. ஜீவபாரதி, “பட்டுக்கோட் டையாரின் பாட்டுப் பயணம்” என்ற தலைப்பிலும், தமுஎகச துணைப் பொதுச் செயலாளர் கவிஞர் களப்பி ரன், “இசை மொழியும்- சிம்பொனி யும்” என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.  நாகர்கோவில் முரசு கலைக்குழு வின் மக்கள் ஆட்டக் கலைகளும், திரை யிசை பின்னணி பாடகர் புதுக்கோட்டை  சுகந்தி மற்றும் கு.மல்லிகா, சி.மணி மாறன், தஞ்சை தமிழ்வாணன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.மோனிகா ஆகியோர் மண் மணக்கும் மக்கள்  பாடல்களை பாடினர். புதுகை பூபாளம்  கலைக்குழுவின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  சி. ஆசைத்தம்பி தலைமையில், சமூக சேவை செய்யும் ஆலயம் அறக்கட்டளை நிர்வாகிகள், திருநங்கைகள் சில்பா, கௌசல்யா ஆகியோரை கவிஞர் பாக்யா பாலா பாராட்டிப் பேசினார். கதை சொல்லல், வரவேற்பு நடனம், நூலரங்கம், கவியரங்கம் நடைபெற்றது. தமுஎகச கிளைப் பொருளாளர் எல்ஐசி கா.பக்கிரிசாமி நன்றி கூறினார்.