tamilnadu

img

சாலை விபத்தில் ஒருவர் பலி : மக்கள் மறியல்

தஞ்சாவூர், டிச.20-  தஞ்சாவூர் அடுத்த கள்ளிமேடு கிராமத்தை சேர்ந்த ராமு (53), விவ சாய கூலித் தொழிலாளி. இவர் புலவர்நத்தத்தில் வெள்ளிக்கிழமை காலை நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விட்டு நிற்கா மல் சென்றது. இதில், பலத்த காய மடைந்த ராமுவை மருத்துவ மனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்பு லன்ஸ் வாகனத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால், ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு தாமதமானது. இதற்கி டையில் ராமு உயிரிழந்தார். இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் தஞ்சாவூர்– நாகை சாலையில் மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அம்மா பேட்டை காவல்துறையினர், போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா னப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை யடுத்து பொதுமக்கள் மறியல் போ ராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.