சேலம், ஆக.20- சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கிராமம் இ.மேட்டுக்காடு அரசு பள்ளி அருகே சாலை விபத்தில் ஒருவர் பலியானார். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கே.ஆர்.தோப்பூர் அருகே கருக்கல் வாடி, கரட்டூர் பகுதியைச் சேர்ந்த பொன்னு சாமி (60). இவர் கே.கே.நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கே.ஆர். தோப்பூர் சாலை பக்க மிருந்து அதிவேகமாக வந்த கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி வாகனம் பொன்னுசாமியின் இருசக்கர வாக னத்தின் மீது மோதியது. இதில் பொன்னு சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற் பட்டது. உடனடியாக அருகில் இருந்த வர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரி ழந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். முன்னதாக, 2017ஆம் ஆண்டு இது போன்ற விபத்து இவ்விடத்தில் இரு முறை நடந்து உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சங்ககிரி கோட் டாட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டு விசாரணைக்கு வந்தது. பின்னர் அவ்விடத்தில் நெடுஞ் சாலைத்துறை சார்பில் இ.மேட்டுக்காடு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகாமையில் வேகத்தடை, மின் விளக்கு, பெயர் பலகை அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால்தான் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவறிந்த மகுடஞ்சாவடி காவல்துறை யினர் பள்ளி வாகனத்தை மட்டும் மீட்டு சென்றனர். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் மீண்டும் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை யடுத்து மகுடஞ்சாவடி ஆய்வாளர் துரை சபாபதி நிகழ்விடம் வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடனடியாக விபத்து தடுப்பு அரண்கள் அமைக்கப்படும் என்றும், பின்னர் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். பின்னர் சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மீதும், பள்ளி வாகனங்கள் முறையாக விதி முறைகளை பின்பற்றப்படுகிறதா என்று உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.