tamilnadu

img

சத்துணவு ஓய்வூதியர் சங்க அமைப்பு தினம்

தஞ்சாவூர், பிப்.28- தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் அருப்புக் கோட்டை துரை.கைலாசம் நினைவு டி.கே.சுப்ரமணியம் அறக்கட்டளை, நீதியரசர் டாக்டர் பி.எஸ்.சோமசுந்தரம் அறக்கட்டளை, பேராசிரியர் சி.வெள்ளையன் பொறியாளர் சுந்தரி அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் “வைக்கம் போராட்டம்” நூலின் ஆசிரி யர் பழ.அதியமானுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.  விழாவிற்குத் துணைவேந்தர் செ.வேலுசாமி தலைமை வகித்தார். “வைக்கம் போராட்டம்” நூல் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு எழுத்தா ளர் பழ.அதியமானுக்கு ரூ 25 ஆயிரம் பரிசு வழங்கி பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “வைக்கம் போ ராட்டம்” 96 ஆண்டுகளுக்கு முன்னால்  நடைபெற்ற போராட்டம். இந்தியாவில் மனித உரிமைக் களத்தில் முதல் போராட்டம். உலகில் எங்கும் கேள்விப் படாத சமூகக் கடுமையான, தெருவில் நடக்கக் கூட கீழ் ஜாதிக்காரர்களுக்கு உரிமை இல்லாத நிலையில் “வைக்கம் போராட்டம்” நடைபெற்றது. 

அது சமூகப் புரட்சி, அமைதிப் புரட்சி, அறிவுப் புரட்சி, ரத்தம் சிந்தா புரட்சி என்ற பெருமைக்கு உரிய போராட்டம். போராட்டத்தில் கலந்து கொள்ள பெரியார் ஏழு முறை வைக்கத்திற்குப் பயணம் மேற்கொண் டுள்ளார். கேரளாவில் 141 நாள்கள் தங்கி இருந்தார் என்றால், அதில் 74 நாள்கள் சிறையில் இருந்தார். இரண்டு முறை கைது செய்யப்பட்ட ஒரே தலைவர் பெரியார் தான். வடநாட்டில் போராட்டம் நடைபெற வைக்கம் போராட்டம் விதையாகப் பயன்பட்டி ருக்கிறது. பெரியாரின் அனுபவம் கொடுமையானது. 

பேசத் தடை, பிரவேசத்தடை, தங்குவதற்கு தடை, சிறைவாசம், சிறப்பு வகுப்பு மறுப்பு, காலில் சங்கிலி, இரு மடங்கு வேலை என துன்பங்களைக் சுமந்தவர் பெரியார்” என்றார்.  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியர் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி தம் ஆய்வு ரையில், “உண்மை  அறிஞர்களைப் பாராட்டாமல் மறந்து போகின்ற சமூகம் பின் தங்கிப் போகும் என்றார். முதல் முறையாக சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக நடத்திய பேராட்டம் வைக்கம் போராட்டம் என்று குறிப்பிட்டார்.  எதிரிகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுகின்றதா? அல்லது நம்மை நோக்கியே போராட்டம் நடத்தப்படு கின்றதா? என்பது பற்றி இந்த நூல் விரிவாகப் பேசுகிறது. நாரயணக்குரு இந்து மதத்தைக் கேள்வி கேட்க வில்லை. சமூகம் மாற்றம் என்பது  இருக்கக் கூடிய அதிகார கட்டமைப்பு களை நியாயப்படுத்தக் கூடிய சித்தா ந்த கருத்தியல் கட்டமைப்புகளை கேள்விக்கு உட்படுத்தவில்லை. அதன் விளைவு இன்றுவரை முற் போக்குவாதிகள் நெருக்கடிக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு சபரிமலை பிரச்சனை சான்றாகும். ஆதிக்க சக்திகளின் எதிர்வினை பெரிய சவாலாக இருக்கிறது. பெரியார் தான் துணை நிற்கிறார்” என்றார். நூலாசிரியர் எழுத்தாளர் பழ.அதியமான் தம் ஏற்புரையில்,” படிக்கின்ற வாசகன் இருந்தால் எழுத்தாளர் எழுதுவதற்கு, உழைப்பதற்கு சலிப்பதில்லை. 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வைக்கம் சத்தியாக்கிரகம் அல்ல. வைக்கம் போராட்டம் என்றால் சமூக நீதியின் அடையாளம். சிதம்பரம், பழனி என்று பெயர் வைப்பது போல பெரியாரின் தொண்டர்கள் தம் குழந்தை களுக்கு வைக்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். வைக்கம் போராட்டம் கோயில் நுழைவு போராட்டம் அல்ல. கோயிலைக் சுற்றியுள்ள வீதிகளில் நடக்கின்ற உரிமை கோரும் போராட்டம். இப்போராட்டம் 610 நாள்கள் நடைபெற்றது. போராட்டத் தலைவர்கள் இல்லாத நிலையில் பெரி யார் அழைக்கப்பட்டார். இந்நூல் எழுத  ஆவணக் காப்பகமும் பத்திரிகைகளும் துணை புரிந்தன. மற்றத் தலைவர்க ளுக்குக் கடுங்காவல் தண்டனை கிடையாது. அரசியல் கைதியாக நடத்தப்பட்டார்கள்.  ஆனால் பெரியாருக்குக் கடுங்காவல் தண்டனை. அரசியல் கைதியும் கிடையாது. பெரியார் அடைந்த துன்பத்தை அவர் சொல்ல வில்லை மற்றவர்கள் கூறிய பதிவு தான் பெருமைக்குரியது”என்றார். விழா நிறைவில் மாணவி பூந்தளிர் நன்றி கூறினார்.