வேலூர், நவ. 12- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18 ஆம் தேதி சிறைக் காவலர் கைதிகள் அறையில் சோதனை நடத்தினர். அப்போது முருகன் அறையிலிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் முரு கன் தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சலு கைகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சிறை அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாகக் கூறி முருகன் 18 ஆம் தேதியில் இருந்து தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வந்தார். சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இம் மாதம் 6 ஆம் தேதி போராட்டத்தை கைவிட்டார். இதை யடுத்து நளினியுடன் சந்திக்க அனுமதியளித்தனர். தனி சிறை வேண்டாம். ஏற்கனவே இருந்த அறையில் அடைக்குமாறு முருகன் சிறை அதிகாரி களிடம் கேட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு சிறைக் காவலர்கள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில் தன்னை மீண்டும் பழைய அறைக்கு மாற்றும் வரை தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று சிறைக் காவலரிடம் முருகன் மனு அளித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக முருகன் உண்ணாநிலையை தொடர்ந்துள்ளார்.