தஞ்சாவூர் ஜூலை.12-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணம் அகமுடையார் தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை வருவாய் துறை சிறப்பு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார். மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றனர்.
முகாமையொட்டி நடைபெற்ற மருத்துவ முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகள், கீரைகள் வழங்கப்பட்டன.