தஞ்சாவூர், அக்.27- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டம், தஞ்சாவூர், லேப் ஒன் மெடிக்கல் சென்ட ரும் இணைந்து நடத்திய, நீரழிவு நோய் கண்டறிதல் மற்றும் மருத்துவ முகாம், தஞ்சை தமிழ்ப் பல்க லைக்கழகத்தில் வியாழனன்று நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி.திரு வள்ளுவன் தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஞா.பழனிவேலு வரவேற்றார். லேப் ஒன் மெடிக்கல் சென்டர் மேலாண்மை இயக்குநர் வி.சொக்கலிங்கம், இயக்குநர் டி.ஸ்டேன்லி டேனியல், லேப் ஒன் மெடிக்கல் சென்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.வி.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முகாமில் பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியா ளர்கள் மற்றும் மாணவர்கள் என மொத்தம் 450 பேருக்கு, சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப் பட்டது. மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் சக்தி உமையாள் வழங்கினார். நிறைவாக முனைவர் சீமான் இளையராஜா, நன்றி கூறினார்.