தஞ்சாவூர், ஏப்.21 - ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி அருகே உள்ள புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடை பெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படியும், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார் அறிவுறுத்தலின் படியும், பேராவூரணி வட்டார அளவிலான சுகாதார திருவிழா, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மாவட்டம் முழுவதும் நடத்தப் பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஏப்.24) பேராவூரணி வட்டாரம் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ள இம்மருத்துவ முகாமில் இலவச நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் வழங்குதல், மக்கள் நல பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்குதல், தாய் சேய் நலம், தடுப்பூசி சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை, காச நோய், கண் நோய், பல், காது மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனை, நல்வாழ்விற் கான யோகா மற்றும் தியானம், காணொளி மூலமாக மருத்துவ ஆலோசனை ஆகி யவை வழங்கப்பட உள்ளன. இதில் பல்வேறு சிறப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளனர். எனவே, பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி. சௌந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். மருத்துவ முகாமிற்கு வருகை தரும் நோயா ளிகள், பொதுமக்கள் ஸ்மார்ட் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் அதன் நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளு மாறு கேட்டுக் கொண்டுள்ளார்.