tamilnadu

img

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, ஏப்.1-


மயிலாடுதுறை அருகே ஏவிசி கல்லூரியின் பீக்காக் விரிவாக்கப் பணி திட்டத்தின் சார்பாக ஒரே நேரத்தில் 5 கிராமங்களில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இக்கல்லூரி தத்தெடுத்துள்ள கிராமங்களான ஆறுபாதி, மணக்குடி, செருதீயூர், மகாராஜபுரம், சோழம் பேட்டை ஆகிய 5 கிராமங்களில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தது. கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் பி.என்.ரத்தினகுமார் தலைமை வகித்தார். செயலர் கே.கார்த்திகேயன், கல்லூரி கல்விக்குழு உறுப்பினர் ஆர்.கோமதி ரத்தினகுமார், கல்லூரி முதல்வர் ஆர்.நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மயிலாடுதுறை கோட்டாட்சியர் இ.கண்மணி. பேரணியை தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவர்கள்கலந்து கொண்டு கிராமங்களின் முக்கிய வீதிகளில் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன் ஏற்பாடுகளை பீக்காக் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்ஏ.ஆரோக்கிய ராஜ், பேராசிரியர் டி.டி.வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.