புதுதில்லி:
மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்தபின், நாட்டில் போதைப் பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஏற்கெனவே குற் றச்சாட்டு உள்ளது.குறிப்பாக, தில்லி, கர்நாடகத் தில் கோடிக்கணக்கான ரூபாய்மதிப்பிலான போதைப்பொருட் கள் பிடிபடுவதும், போதைப் பொருட்கள் கடத்தல் பேர்வழிகளுடன் பாஜகவினருக்கு இருக்கும் தொடர்பும் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.ஆனால், பாஜக ஆதரவு பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத், “இந்தி சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் சர்வ சாதாரணமாக உள்ளது. பாலிவுட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நுழைந்தால், ஏராளமான ‘ஏ-கிரேட்’ நட்சத்திரங்கள் கம்பி எண்ண வேண்டியதிருக்கும்’’ எனபிரச்சனையைத், திரையுலகத்தின் மீது திசைத் திருப்பும் முயற்சியில் இறங்கினார்.பாஜக எம்.பி.யும் போஜ்புரி நடிகருமான ரவி கிருஷ்ணனும் இதையே நாடாளுமன்றத்தில் பேசினார். பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு பாலிவுட் திரையுலகினரை பயன்படுத்தி வருவதாகவும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
ஆனால், எதிர்பாராத விதமாக,சமாஜ்வாதி எம்.பி.யும், அமிதாப் பச்சனின் மனைவியுமானஜெயாபச்சன், நாடாளுமன்றத்திலேயே கங்கனா, ரவி கிருஷ்ணன் போன்றவர்களுக்கு பதிலடி கொடுத் தார். “5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 50 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் சினிமா உலகம் வேலைவாய்ப்பு அளிக்கிறது. ஆனால், சினிமா மூலம் புகழும், பணமும் சம்பாதித்தோர்- சோறூட் டும் கையையே கடிப்பதுபோல - இந்த துறையைக் கேவலப் படுத்துகின்றனர். இதனை ஏற்க முடியாது” என்றார்.பாஜகவினருக்கு எதிராக, பாலிவுட் திரையுலகின் மூத்த நடிகை ஜெயாபச்சன் கொதித்து எழுந்ததற்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.எம்.பி.யாக இருந்தவரும், நடிகையுமான ஷபானா ஆஸ்மி, “ஜெயாபச்சன், அவசியமான கருத்தைச் சரியான இடத்தில் சொல்லி உள்ளார். இதற்காக பெருமைப்படுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.இதேபோல பாலிவுட் திரை நட்சத்திரங்கள் டாப்சி பானு, தியாமிர்சா, சோனம் கபூர், ஜெனிலியாஉள்ளிட்டோரும் ஜெயாபச்சனுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.