மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சோழவரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வாயன்று (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் டி.சரளா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், துணைச் செயலாளர் இ.தவமணி, ஒன்றியத் தலைவர் ரவி, மாவட்டக்குழு உறுப்பினர் முனுசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் எல்லாபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டச் செயலாளர் பி.அருள், தலைவர் டி.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பிரேம்குமார், மாதர் சங்க நிர்வாகிகள் கே.ரமா, ஏ.பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.