tamilnadu

மத்திய பாஜக அரசை கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.16- “ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை பொது முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு அதிகரித்திட, பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அது வரை மத்திய அரசாங்கம் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும்.  குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000 என்பதை உத்தரவாதம் செய்திட வேண்டும். வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாதாந்திர வாழ்க்கை ஊதியம் வழங்கிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், ராணுவ தளவாட தொழிற்சா லைகள், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தி யாவை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும்.  மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழ் வேலை நாட்க ளை 200 ஆக அதிகரிக்க வேண்டும். நிலுவை தொகைகளை வழங்க வேண்டும். விவசா யிகளுக்கு விவசாய நெருக்கடியில் இருந்து மீள ஒரு முறை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். வயதானவர்கள் மற்றும் விதவை களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூபாய் 3000 ஆக அதிகரிக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் சார்பில் புதன்கிழமை நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                                                                                     அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆர்.உலகநாதன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைசாமி, இளங்கோவன், அரியலூர் ஒன்றியச் செயலா ளர் அருணன், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாச்சலம், ஆண்டி மடம் ஒன்றியச் செயலாளர் வி.பரமசிவம், திருமானூர் ஒன்றியச் செயலாளர் புனிதன், கந்தசாமி, பழூர் ஒன்றியச் செயலாளர் ராதா கிருஷ்ணன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னர் எம்.சின்னதுரை, சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.                                                                                  தஞ்சாவூர்
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் சிபிஎம் கோ.நீலமே கம், சிபிஐ மு.அ.பாரதி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் டி.கண்ணையன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், வெ.ஜீவகுமார், கே.பக்கிரிசாமி, சின்னை.பாண்டியன், சி.ஜெயபால், எம்.மாலதி, என்.சுரேஷ்குமார், கே.அருளரசன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் இடைக்கமிட்டி நிர்வாகி கள், சிபிஐ மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிர மணியன், மாநிலக்குழு சி.பக்கிரிசாமி, ஏஐடியூசி சந்திரகுமார், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வி.கல்யா ணசுந்தரம், காசிநாதன், நகரச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடது சாரிக் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் எஸ்.கவிவர்மன், மு.மாதவன், பழ.ஆசைத் தம்பி, அ.கோவிந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வா கக்குழு உறுப்பினர் த.லெனின், சிபிஐ (எம்எல்) கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பா ட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டத் தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பா ட்டத்தை விளக்கி சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர்கள் என்.பாண்டி, எஸ்.ஸ்ரீதர், சிபிஐ மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சுரேஷ், முன்னாள் மாநில நிர்வாகக்குழு உறுப்பி னர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஜான்பால் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைகமிட்டி செயலாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கரூர்
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரத்தினம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் வீ.மாரியப்பன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜு, கே.சக்தி வேல், சி.முருகேசன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் கே.சண்முகம், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாவட்டத் தலைவர் மு.ராமச்சந்திரன், பால்ராஜ் உள்ளிட்ட நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.