திருச்சிராப்பள்ளி, மே 27 - பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரிகளை கைவிட்டு விலை உயர்வு களை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். வருமான வரி வரம்பிற்கு உட்படாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டு வர வேண்டும். வேலையில்லா கால நிவாரணம் அளிப்ப தற்கான மத்திய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அரசுத் துறையில் காலிப் பணியி டங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். நிலக்கரி பற்றாக்குறைக்கு வழிவகுத்த அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மின்சார உற்பத்தியை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத் தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வியாழனன்று மரக்கடை ராம கிருஷ்ணா பாலம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், சிபிஐ மாவட்டச் செயலாளர் திராவிடமணி, கவுன்சிலர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்குப்பகுதி செயலாளர் சந்தான மொழி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானதேசிகன் ஆகி யோர் பேசினர். திருவெறும்பூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செய லாளர் மல்லிகா தலைமை வகித்தார்.
அரியலூர்
அரியலூரில் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ மாவட்ட செயலாளர் உலகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் இளங்கோ வன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வநம்பி ஆகியோர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர்கள் எம்.வடிவேலன் (சிபிஎம்), ரா.பிரபாகர் (சிபிஐ), க.தமிழ் முதல்வன் (வி.சி.க), எஸ்.எம்.ராஜேந்திரன் (சிபிஐஎம்-எல் லிபரேஷன்) ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் முத்து.உத்திரா பதி, விசிக மத்திய மாவட்டச் செயலாளர் சொக்கா.ரவி, சிபிஐ (எம்-எல்) லிபரேஷன் மாவட்டச் செயலாளர் டி.கண்ணையன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். பூதலூர் வடக்கு ஒன்றியம் சார்பாக திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினரும், மாவட்டச் செய லாளருமான சின்னை. பாண்டியன் கண்டன உரையாற்றினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தெ.கலைமுரசு, சிபிஐ (எம்எல்) கட்சியின் மாவட்டச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ சிறப்புரையாற்றினார்.