புதுக்கோட்டை, ஜூலை 22- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தையும், தோழர் ஆர்.நல்லக்கண்ணுவையும் அவதூராக சமூக வலைத்தளங்களில் சித்தரித்த சங்பரிவாரக் கும்பலைக் கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எழுக்க வலியுறுத்தியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு சிபிஐ மாவட்டச் செயலா ளர் மு.மாதவன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறு ப்பினர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத் தலைநக ரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
அறந்தாங்கி
சுப்பிரமணியபுரம் அண்ணாசிலை அருகில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப்பையா, சிபிஐ ஒன்றியச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். நாகுடி காவல் நிலையத்தில் சிபிஐ ஒன்றிய செயலாளர் முத்துசாமி புகார் மனு கொடுத்தார்.
பொன்னமரவதி
பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் ஏனாதி ஏ.எல்.ராசு தலைமை வகித்தார்.
மன்னார்குடி
மன்னார்குடி பெரியார் சிலை எதிரில் சிபிஐ நகர செயலாளர் வி.கலைச்செல்வன் தலைமை வகித்தார். சிபிஎம் நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
கும்பகோணம்
திருப்பனந்தாளில் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு தலைமை வகித்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு ஒன்றியச் செயலாளர் சி.ராமநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அண்ணா சிலை முன்பு சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் கண்டன நடைபெற்றது.
திருவாரூர்
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சிபிஐ செயலாளர்கள் எம்.ஏ.மாரியப்பன்(நகரம்), கே.புலிகேசி (ஒன்றியம்) ஆகியோர் தலைமை வகித்தனர்.
குடவாசல்
குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே சிபிஐ குடவாசல் ஒன்றிய செயலாளர் ஏ.சுப்ரவேல் தலைமையில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே.உல கநாதன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொ ண்டனர். பின்னர் சமூக வலைதளங்க ளில் அவதூறு பரப்புவோர் மீது நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திரு த்துறைப்பூண்டி மற்றும் ஆலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளி க்கப்பட்டது.