tamilnadu

மண்ணச்சநல்லூர்  எம்எல்ஏ வீடு, அரிசி ஆலைக்கு  சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பு

திருச்சிராப்பள்ளி, நவ.24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ.,வாக பரமேஸ்வரி முருகன் உள்ளார். இவர் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் செண்பகா நகரில் புதிய வீடு கட்டி கடந்த சில மாதங்களுக்கு முன் குடியேறி உள்ளார். இந்த வீட்டிற் கான குடிநீர் இணைப்பிற்கு பேரூராட்சியில் எவ்வித அனு மதியும் பெறாமல் சட்ட விரோதமாக 2 இன்ச் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு செய்துள்ளார். பின்னர் 10 நாட்கள் கழித்து பேரூராட்சியில் ரசீது பெற்றுள்ளார். இதே போன்று பூனாம்பாளையம் ஊராட்சி எல்லையி லுள்ள எம்எல்ஏ.,வுக்கு சொந்தமான அரிசி ஆலைக்கும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி மக்களுக்கு வழங்கும் குடிநீர் குழாயில் சட்ட விரோதமாக 2 இன்ச் குழாயை இணைத்து தண்ணீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விரோத குடிநீர் இணைப்பை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.