tamilnadu

img

புதிய குடிநீர் இணைப்பு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு  

அவிநாசி அருகே குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதனன்று(ஜன.12) கோரிக்கை மனு அளித்துள்ளது.  

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் பத்தாண்டு காலமாக புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாததால் பொதுமக்கள் வெகுவாக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை மனு மற்றும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளது. தற்போது 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் புதிய குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளனர். உடனடியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர் தங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தனர்.  

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், கிளைச் செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.