திருச்சிராப்பள்ளி, ஏப்.10-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிசார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர் புதன்கிழமை திருச்சி முசிறிசட்டமன்ற தொகுதி முசிறி, மேற்கு,கிழக்கு, தா.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட குணசீலம், ஏவூர், நாச்சம் பட்டி, பேரூர், குங்குமபுரம், புதுப்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் பாரிவேந்தர் பேசுகையில், தண்ணீர்பிரச்சனை, வேலைவாய்ப்பு அதற்குதேவையான புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவேன். விவசாயத் துறையில் பல புதிய நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் கூடுதல் பலன் அடைய நடவடிக்கை எடுப் பேன். கொள்ளியடிபாளையம் ஊர் மக்களின் கோரிக்கையான பேருந்து வசதி உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவேன் என்றார். வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட டாக்டர் பாரிவேந்தருக்கு பெண்கள் ஆரத்திஎடுத்து வரவேற்பு கொடுத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.