tamilnadu

img

குளித்தலை பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.15-மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பாரிவேந்தர், குளித்தலை பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதில் அவர் பேசுகையில், விவசாயிகளுக்கு வாழை உற்பத்தியில் உரிய விலைகிடைக்கவும், வாழை உற்பத்தியை மேம்படுத்த வாழை குளிர்பதன கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். அய்யர்மலை ரோப்கார் திட்ட பணிகளை விரைவுபடுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்றார். பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.