tamilnadu

img

துறையூர் பகுதியில் பாரிவேந்தர் வாக்குச் சேகரிப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.11-மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வியாழனன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார். இதில்பாரிவேந்தர் பேசுகையில், இப்பகுதியில் காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தை முறைப்படுத்தி குடிநீர் பிரச்சினையை உறுதியாக தீர்ப்பேன். பின் தங்கியதொகுதியான பெரம்பலூர் தொகுதியில் தொழிற்சாலைகள், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவேன். விவசாய சார்ந்த தொழிற்சாலையும் கொண்டு வருவேன். சிறப்பு பொருளாதாரம் மண்டலம் மங்களம் மேடுபகுதியில் திட்டமிடப்பட்டு கிடப்பில்போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம். செங்காட்டுப்பட்டியில் மக்களின் கோரிக்கையான கலைக் கல்லூரி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் துறையூர் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார். மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் ரவி,துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.