tamilnadu

img

திருக்கடையூரில் அரசின் சிறப்பு நலத்திட்ட விழா

நாகை மாவட்டம், திருக்கடையூரில் அரசின் சிறப்பு நலத்திட்ட விழா நடைபெற்றது. சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்டம் வழங்கப்பட்டது. இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை கைத்தறி மற்றும் நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர், பூம்புகார் . சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், வட்டாட்சியர் சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருண், வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.