திருச்சிராப்பள்ளி, மார்ச் 8- திருச்சி எம்.ஐ..இ.டி. கல்வி நிறுவ னங்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்க உதவி யுடன் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிறு அன்று எம்.ஐ..இ.டி. கல்லூரி வளா கத்தில் நடைபெற்றது. முகாமை கல்லூரி யின் தாளாளர் முகமது யூனுஸ், திருச்சி மத்திய மண்டல காவல் ஆய்வாளர் அமல் ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் வினிதா ரேஸ்மி உள்பட 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்தனர். இதில் திருச்சியை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிரா மத்தைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற னர். முன்னதாக எம்.ஐ.இ.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அந்தோ ணிராஜ் வரவேற்றார். மேலாண்மைத் துறைத் தலைவர் குளோரி வயலட் ஆரோன் நன்றி கூறினார்.