tamilnadu

img

கண் பரிசோதனை முகாம்

மன்னார்குடி: மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், எஸ்.பி.ஏ. மெட்ரிக் மேனிலைப் பள்ளி, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து எஸ்.பி.ஏ. பள்ளி வளாகத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி அனிதா முன்னிலை வகிக்க, சமூக ஆர்வலர் மருத்துவர் சி.அசோக்குமார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பள்ளியில் படிக்கும் 750 பேருக்கு கண் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் மாரியப்பன், துணை ஆளுநர் திருநாவுக்கரசு, மாவட்ட நிர்வாகி மருத்துவர் வி.பாலகிருஷ்ணன், முன்னாள் தலைவர் மனோகரன், மருத்துவர் தமிழ்செல்வம், தொழிலதிபர் கும்மிட்டித்திடல் கோவிந்தராஜ் உள்ளிட்டு  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.