திருவள்ளூர், பிப் 24- திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாளந்தூரில் வியாழனன்று ஊராட்சி மன்ற தலைவர் வி.விஜயன் தலைமையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் கண்புரை அறுவை சிகிச்சை, மாலைக்கண் நோய், கருவிழி நோய், விழித்திரை பாதிப்பு போன்ற நோய்களுக்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை, சின்மயா கிராம மேம்பாட்டு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் ரிஷிமா, ஜனனி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுதாகர், சின்மயா கிராம மேம்பாட்டு இயக்குநர் பிரியா, சமூக சேவகி பிரபாவதி ரமேஷ், களப்பணியாளர்கள் செந்தில்குமார், காயத்ரி, கங்காகவுரி உட்பட பலர் கலந்து கொண்டனர். பரிசோதனை முடிவில் 80 நபர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கினர். இதனை தொடர்ந்து தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை அருகில் உள்ள பாக்கம் கிராமத்திலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.