tamilnadu

img

நியாய விலைக் கடை திறப்பு விழா

பெரம்பலூர், ஆக.26- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தேவையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வாலிகண்டபுரம் அங்காடியுடன் இணைந்த 671 குடும்ப அட்டைகளில் வல்லாபுரம் கிராமத்தை சார்ந்த 153 குடும்ப அட்டைதாரர்கள் 3 கிமீ.க்கும் மேல் நடந்து சென்று பொருள் வாங்கும் நிலை ஏற்பட்டது.  இதைதொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று வல்லாபுரத்தில் புதிய பகுதி நேர அங்காடியை பெரம்பலூர் ஏம்எல்ஏ இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். இதன் மூலம் 153 குடும்பங்கள் பயன் பெறும். விழாவில் துணைப் பதிவாளர் த.பாண்டித்துரை, பெரம்பலூர் தொடக்க வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி தலைவர் சிவப்பிரகாசம், சங்க தலைவர் சுப்ரமணியம், துணைத்தலைவர் முத்துசாமி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டுறவு சார்-பதிவாளர்கள் சிவக்குமார், செல்வராஜ், பாலமுருகன், வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர்  சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.