tamilnadu

மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.13- தொழிற்சங்க தலைவர்களை சந்திக்க மறுக்கும் மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கு மற்றும் ஆய்வு என்ற பெயரில் அவுட் சோர்சிங் பாதைக்கு வழிவகுக்கும் நட வடிக்கைகளை கண்டித்தும், மின்சார சட்டத் திருத்த மசோதா 2020ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு சார்பில் வியாழனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய திருச்சி மண்டல தலைமை பொறி யாளர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித் தார். தொமுச தலைவர் மலை யாண்டி, ஐக்கிய சங்க ராஜ மாணிக்கம், எம்ப்ளாய்ஸ் பெட ரேசன் சிவசெல்வம், சம்மேள னம் பெருமாள், சிஐடியு செல்வ ராஜ், டிஎன்பிஇஓ இருதயராஜ், நடராஜன், ராதா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.