நாகர்கோவில், ஆக.5- சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 குறித்து மத்திய அரசு கைவிடக் கோரி ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சமூக செயல்பாட்டு இயக்கம் முடிவு செய்துள்ளது. இந்த இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாகர்கோவில் கிராம மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இயக்குநர் ராம்குமார் தலைமை வகித்தார். பத்மநாப புரம் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்க ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் என்.முருகேசன், வழக் கறிஞர் அ.மரிய ஸ்டீபன், இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் அ.மரிய ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் மனோதங்கராஜ் பேசுகையில், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சட்டத்தின் அவசியத்தை பற்றியும் சூழியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 மூலம் மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ப தையும், விவசாயிகள் தன்னுடைய நிலங்க ளை விற்று விட்டு பெரும் முதலாளிக ளுக்கு அடிமையாக போகும் சூழ்நிலை உருவாகி விடும் என்பதையும் இதனால் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக அனை வரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
என்.முருகேசன் பேசுகையில், இயற்கை வளங்களை அழிக்கும் நோக்கத் தோடு அரசாங்கம் செயல்பட்டு வருகிறது அதனை மக்கள் எதிர்த்து போராட வேண்டும். இல்லையென்றால் இனிவரும் சமுதாயம் நோயின் பிடியிலும், வறுமை யின் பிடியிலும் சிக்கி தவிக்கும் அவலம் வரப் போகிறது என கூறினார். இந்திய மக்களின் வாழ்வாதாரம் இந்த இஐஎ சட்டத் திருத்தத்தால் பாதிக்கப்படும். எனவே மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்த சட்டத்திருத்தத் தை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.