திருச்சிராப்பள்ளி, ஏப். 26 - 15 ஆண்டு கால வாகனங்களை பயன் படுத்த அபராதம் விதிக்கும், மோட்டார் வாகன தொழிலை நாசமாக்கும் 2019 மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். உயர்த்தப்பட்ட எப்.சி, இன்சூ ரன்ஸ், சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் மீதான 270 சதவீத கலால் வரியை குறைத்து ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும். 2019 மோட்டார் வாகன சட்டத் திருத் தத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். பைக் டாக்ஸி, ட்ராப் டாக்ஸியை ரத்து செய்ய வேண்டும். ஆட்டோ, கார்க ளுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றாற்போல் கட்டணத்தை தீர்மானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று சத்திரம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் வீர முத்து தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சங்க செயலாளர் சந்திரன், பொரு ளாளர் சுரேஷ் ஆகியோர் பேசினர். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.