திருச்சிராப்பள்ளி, செப்,24- திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவி லியர், பணியாளர்களை கூடுதலாக நிய மிக்க வேண்டும். பகுதி நேர மருத்துவ மனையை 24 மணிநேரமும் செயல் படுத்த வேண்டும். புள்ளம்பாடி பேரூ ராட்சிக்குட்பட்ட கடைகளை முறை கேடு இல்லாமல் வெளிப்படை தன்மை யுடன் ஏலம் விட வேண்டும். புள்ளம்பாடி – திருமானூர் செல்லும் பயணிகளுக்கு கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புள்ளம்பாடி ஒன்றியக்குழு சார்பில் செவ்வாய்க் கிழமை புள்ளம்பாடி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செய லாளர் வினோத்குமார் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை முன்னாள் மாவட்ட பொருளாளர் ரஜினிகாந்த் துவக்கி வைத்து பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் சந்திரபிரகாஷ் கண்டன உரையாற்றினார். புறநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், ஒன்றிய துணை செயலாளர் அகஸ்டின், ஒன் றிய பொருளாளர் சதாசிவம், ஒன்றிய துணைத் தலைவர் அன்புகரசன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.