தஞ்சாவூர், ஜூன் 25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாவட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தலை மை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, எம்.மாலதி, பி.செந்தில்குமார் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை, மகன் சாவு க்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ 1 கோடி இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், கிராமப் ப்றங்களிலும் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகள், அங்கன்வாடிகள், உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாண வர்களுக்கு சத்துணவு திட்டத்தை தொடங்கி, சமைத்த உணவினை ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி ஜூன் 27 அன்று தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், ஒரு வருட காலத்தில் கடுமையாக உயர்த் தப்பட்டுள்ள மின் கட்டணத்தை ரத்து செய்திடவும், ஊரடங்குக்கு முன்னதாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்த கட்டணத்தையே ஊரடங்கு காலத்திலும் வசூலிக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் முதலமைச்சருக்கு (மின்வாரிய அலுவலகங்கள் மூலமாக) மனுக்களை அனுப்பும் இயக்கம் ஜூன் 26 முதல் 30 வரை நடத்துவது, அதனை தொடர்ந்து, தஞ்சை மாவட்டத்தில் ஜூன் 29 அன்று அனை த்து ஒன்றிய நகரங்களில் மின் வாரிய அலு வலகங்களில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.