சிதம்பரம்,டிச.30- நடந்து முடிந்த ஊராக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 2 ஆம் தேதி நடை பெறும் வாக்கு எண்ணிக்கைக் காக காத்திருக்கும் நிலை யில், கடலூர் மாட்டம் சிதம்ப ரம், பரங்கிப்பேட்டை, கட்டு மன்னார்குடி உள்ளிட்ட பல இடங்களிலும் எங்களுக்கு சாதமாகத்தான் தேர்தல் முடிவுகள் இருக்கும் என்று ஆளும் கட்சித்தரப்பில் பரவலாக இப்போதே பேசப் படுகிறது. எனவே, ஜனநாயகப் பூர்வமாக, முறையாக வாக்கு எண்ணிக்கையை நடத்த வலியுறுத்தி பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திமுக, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வு ரிமைக் கட்சிகளின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. திமுக ஒன்றியச் செயலா ளர் முத்து.பெருமாள் சிபிஎம் செயலாளர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, விடுதலை சிறுத்தைகள் சார்பில் செல்வ மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா ளர் முடிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.