திருச்சிராப்பள்ளி, ஜூன் 13- அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் தொழிற்சங்கம் அமைத்ததால் தொழிலாளர்களை பழிவாங்கும் நிர்வாகத்தின் போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த வலி யுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் வியாழனன்று ராமகிருஷ்ணா பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், பொரு ளாளர் ராஜேந்தின், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ், மாவட்டச் செயலாளர்கள் சாலை போக்குவரத்து சங்க வீரமுத்து, கட்டுமான சங்க பூமாலை, மாற்றுத் திறனாளிகள் சங்க ஜெயபால், மருந்து மற்றும் விற்பனைப் பிரதி நிதிகள் சங்க செல்வராஜ், டாஸ்மாக் தொழிலாளர் சங்க பிரகாஷ், மாவட்டத் தலைவர்கள் சுமைப்பணி தொழிலாளர் சங்க குணசேகரன், ஆட்டோ ஊழியர் சங்க சந்திரன், துப்புரவு தொழிலாளர் சங்க இளையராஜா ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சை
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி ஜெயபால் சிறப்புரை யாற்றினார். மாவட்டத் தலைவர் து.கோவிந்தராஜ், டாஸ்மாக் ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் கே. வீரையன், மருந்து விற்பனைப் பிரதி நிதிகள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பாலமுருகன், மாவட்டத் தலை வர் கே.முருகேசன், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலை வர் மணிமாறன், ஆட்டோ சங்க கவு ரவத் தலைவர் ஜெயராஜ், தஞ்சை நகராட்சி ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயப் பிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.