மனோ தங்கராஜ் அமைச்சராக பதவியேற்பு!
சென்னை, ஏப். 28 - மனோ தங்கராஜ் மீண் டும் அமைச்சராக பதவி யேற்றார். அவருக்கு ஆளு நர் ஆர்.என். ரவி, பதவிப் பிர மாணம் செய்துவைத்தார். திங்களன்று (ஏப்.28) மாலை ஆளுநர் மாளிகையில் நடை பெற்ற நிகழ்ச்சியில், முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதய நிதி, மூத்த அமைச்சர்கள் க. துரைமுருகன், கே.என். நேரு, ஐ. பெரியசாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்றக்குழுத் தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர். மீண் டும் அமைச்சராக பதவியேற்ற மனோ தங்கராஜ் க்கு, ஏற்கெனவே அவர் வகித்து வந்த பால்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.