அரசு ஊழியர் - ஆசிரியர்களுக்கான 9 சிறப்பு அறிவிப்புகள்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஏப். 28 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 9 சிறப்பு அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதலமைச்சர் வெளியிட்டார். திங்களன்று (ஏப்.28) காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடிய தும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களின் நலன் கருதி பல்வேறு அறிவிப்பு களை விதி 110-ன் கீழ் வெளியிட்டு, முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “இந்த அரசு பொறுப் பேற்றதிலிருந்து எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களும், பல்வேறு துறைகளில் திட்டப் பணிகளும் பாராட்டத்தக்க வகையில் நிறைவேற்றப்பட்டு வரு கிறது. அகில இந்திய அளவில் நம்மு டைய தமிழ்நாடு பலவகையில் முதலிட த்திலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது” என்றார். “அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் களின் உழைப்பும், சீரிய பங்களிப்பும் இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம். அரசு நடைமுறைப்படுத்தி வருகிற நலத் திட்டங்கள், யாருக்கும் விட்டுப் போகாமல், அனைத்து மக்களையும் சென்றடைய பணியாற்றும் அரசு ஊழி யர் ஒவ்வொருவரையும் இந்த தரு ணத்தில் தமிழ்நாடு அரசு சார்பிலும், தனிப்பட்ட முறையிலும் பாராட்டு கிறேன்” என்று தெரிவித்தார். 15 நாள் சரண்டர் விடுப்புக்கு பணப்பலன் தொடர்ந்து 9 அறிவிப்புகளை வெளி யிட்டார். “கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலு வலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை, 1.4.2026 முதல், 15 நாட்கள் வரை சரண் செய்து பணப் பலன் பெறும் வகையில் மீண்டும் செயல் படுத்தப்படும் என்று அறிவித்தோம். இருந்தாலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை, இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த கோரிக்கையைப் பரிசீலித்து, 15 நாட்கள் வரை 1.10.2025 முதல் சரண் செய்து பணப் பயன் பெறலாம். இதன்படி, சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 3 ஆயிரத்து 561 கோடி ரூபாய் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். மாநில அரசுப் பணியாளர்களுக்கும் 1.1.2025 முதல் அகவிலைப்படி 2 விழுக்காடு உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதி யதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதிய தாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வினை நடைமுறைப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 1,252 கோடி ரூபாய் கூடுதல் நிதி செலவிடப்படும். பண்டிகை - திருமண முன்பணம் உயர்வு இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தா யிரம் ரூபாய் பண்டிகை கால முன் பணம் இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், கல்வி முன்பணம் இந்த ஆண்டிலிருந்து தொழிற்கல்வி பயில 1 லட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் பயில ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மேலும், திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ. 6 வழங்கப்படுகிறது. இதனை பலமடங்கு உயர்த்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனை வருக்கும் பொதுவாக ரூ. 5 லட்சம் உயர்த்தி வழங்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிராம பணியமைப்பு உட்பட ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்துவகை தனி ஓய்வூதி யதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் பரிசுத் தொகை, ஐந்நூறு ரூபாயிலிருந்து ஆயிரம் ரூபாயாக இனி உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் அவர்தம் குடும்பத்தினருடன் பண்டிகையைச் சிறப்பாக கொண்டாடிட, தற்போது வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம், ரூ. 4 ஆயிரம் ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். பழைய ஓய்வூதியம் எப்போது? அண்மையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்து, அந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில், இந்தக் குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படும். 12 மாதங்களுக்கு மகப்பேறு விடுமுறை திருமணமான அரசு பெண் பணி யாளர்களுக்கு மகப்பேறுக்காக ஒன்பது மாத காலமாக இருந்த விடுப்பு, 1.7.2021 முதல் ஓராண்டு காலமாக உயர்த்தப் பட்டு, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக் காலத்தினை அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் வழியில் அரசு ஊழியர் களுக்கு அரணாக, அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக இந்த அரசு என்றென்றும் தொடரும்,தொடரும். தொடரும்!” என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.