சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் மனு கொடுக்கும் போராட்டம் ஆசிரியர் அமைப்புகள் சார்பில் நடந்தது.
புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரி சிவகங்கை மாவட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாக அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆ.நாகராஜன் தலைமையில், உறுப்பு சங்கங்கள் நிர்வாகிகளான தமிழ்நாடு இடைநிலைஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளரும், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மத்திய செயற்குழு உறுப்பினருமான அ.சங்கர், தமிழ்நாடு மேல்நிலை முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங் கத்தின் மாநில பொருளாளர் செ.சிவகுமார், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் நீ.இளங்கோ,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மு.க.புரட்சி தம்பி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப் பின் மாவட்ட செயலாளர் பீட்டர் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வியாழனன்று கோரிக்கைஅடங்கிய மனு அளித்தனர்.