districts

டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடக் கோரி வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

கும்பகோணம், நவ.29- சில்லறை விற்பனைக் கடைகளில் டெஸ்ட் பர்சேஸ் முறையை கைவிடக் கோரி  கும்பகோணத்தில் வணிகர்கள் கடைய டைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வணிக வரித் துறையினர் கடைகளுக் குள் பொருட்கள் வாங்குவது போல் வந்து  டெஸ்ட் பர்சேஸ் என பொருட்களை வாங்கி,  அதற்கு உரிய ரசீது இல்லை எனக் கூறி அப ராதம் விதிக்கின்றனர். அதேபோன்று, சாலைகளில் ஆங்காங்கே நின்று கொண்டு,  சரக்கு வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைத் துறைமுக சரக்கங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பொருட் களை மாநில எல்லைகளிலும் வைத்து வரி  ஆய்வு சோதனை செய்தால், வரி ஏய்ப்பு  தடுக்கப்பட்டு அரசுக்கு வருவாய் கிடைக்  கும். எனவே வணிக வரித்துறையினரால் சில்லறை விற்பனை கடைகளில் மேற் கொள்ளப்படும் டெஸ்ட் பர்சேஸ், சரக்கு வாகனத் தணிக்கை உள்ளிட்டவற்றை உட னடியாக கைவிட வேண்டும்.  வணிகர்களுக்கு வரி செலுத்தும் முறை கள் குறித்து வணிக வரி துறை உரிய  பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், புதன்கிழமை காலை 10 மணி  முதல் மதியம் 12 வரை கும்பகோணம் மாநக ரத்தில் உள்ள சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. பின்னர், கும்பகோணத்தில் உள்ள  மாவட்ட வணிக வரித்துறை அலுவலக வாயிலில், வணிகர் சங்க தலைவர் சி. மகேந்திரன் தலைமையில், செயலாளர் வி.சத்தியநாராயணன், துணைத்தலைவர் பா.ரமேஷ்ராஜா, துணைச் செயலாளர்கள் வேதம்முரளி, கு.அண்ணாதுரை உட்பட ஏராளமான வணிகர்கள் கண்டன உரை யாற்றி மனு அளித்தனர்.