districts

img

சிப்காட் அமைப்பதை கைவிடக் கோரி கிராம மக்கள் மலை சுற்றும் போராட்டம்

திருவண்ணாமலை, மார்ச்.6- திருவண்ணாமலை அடுத்த பாலியப் பட்டு ஊராட்சியில், விளைநிலங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதை கைவிடக்கோரி, சிப்காட் எதிர்ப்பு விவசாய மக்கள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த போராட்டத்தின் 75 ஆவது நாளான சனிக்கிழமை (மார்ச் 6) கிராம மக்கள் மலை சுற்றும் போராட்டத்தில் ஈடு பட்டனர், சிப்காட் அமைப்பதை கைவிடக் கோரி, கோஷங்கள் எழுப்பி தங்கள் கோரிக்  கையை தெரிவித்த வண்ணம் மலையை சுற்றி வந்தனர். பாலியப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஒருங்கிணைப்பாளர் சம்பத், குட்டிக் கவுண்டர் மற்றும் ஏராளமான கிராம மக்கள் இந்த மலை சுற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.