திருச்சிராப்பள்ளி, ஜூலை 14- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக அசுத்த மான குடிநீர் வழங்கப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனையடுத்து அப்பகுதி மக்கள் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி செய லாளர் வேலுச்சாமி தலைமையில் கலங்கிய குடி நீரை பாட்டிலில் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மாந கராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இதுகுறித்து அவர்கள் மாநகராட்சி அதிகாரி களிடம் கொடுத்த மனுவில், திருச்சி மாநகராட்சிக்கு ட்பட்ட 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகளுக்கு ஜீயபு ரத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 1990லிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொள்ளிடம் கூட்டு குடிநீர் இணைக்கப்பட்டதால் குடிநீர் சேரும், சகதியுமாக கலங்கலாக வருகின்றது. இதனால் பொதுமக்களுக்கு மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொள்ளிடம் இணைப்பு குடிநீருக்கு பதி லாக ஜீயபுரத்தில் உள்ள 2 பம்பு செட்கள் மூலமாக சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகளில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி களை சுத்தம் செய்ய வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பிராட்டி யூர் பகுதியில் மழைநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.