tamilnadu

img

சாலை வசதி கோரி மக்கள் மனு

தஞ்சாவூர் ஆக.30- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி பகுதியில் சாலை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் எம்.முகமது ஜக்கிரியா அளித்த மனுவில், "பேராவூரணி பேரூராட்சி பொன்காடு- மாவடுகுறிச்சி ரோடு எண்-30 பேராவூரணி பிட்-1 கிராமத்தில் எஸ்.கே.பிராய்லர் எதிரில் உள்ள மண் சாலை, 12 சென்டில் இனாம் சாசனமாக பேரூராட்சிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாகியும், இதுவரை சாலை பராமரிக்கப்படாமல், குண்டுங்குழியுமாக உள்ளது.  இங்கு 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் மக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, இந்த இடத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் இதில்  கூறப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவின் நகல் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.