districts

img

சாலை வசதி கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கரூர், மார்ச் 23- கரூர் மாவட்டம் தோக மலை ஒன்றியம் பொருந்த லூர் ஊராட்சிக்குட்பட்ட தெலுங்கப்பட்டியில் சிமெ ண்ட் சாலை அமைக்க வேண் டும், ஆதிதிராவிடர் சுடுகாடு வரை தார்சாலை அமைக்க வேண்டும், புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை உடனடி யாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெலுங்கபட்டி கிளை யின் சார்பில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ஏ.பெரிய சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் கே.சக்திவேல், பி.ராமமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் பெருமாள், ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்ரமணியன், ரமேஷ், விவ சாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் முனியப்பன், விவசா யத் தொழிலாளர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் சங்க பிள்ளை உள்ளிட்டோர் பேசினர். தகவல் அறிந்து வந்த தோகைமலை ஒன்றிய ஆணையர் விஜயகுமார் தலைவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு எடுத் துச் சென்று உரிய நடவ டிக்கை எடுப்பதாக தெரி வித்தனர்.