திருவண்ணாமலை, செப்.11- திருவண்ணாமலை மாவட்டம் தாம ரைப்பாக்கம், அரிதாரிமங்கலம் கிராமங்க ளுக்கு சாலை வசதி ஏற்படுத்த கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் அலுவலகம் முன்பு நடத்திய போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.கணபதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன், சிபிஎம் வட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன், நிர்வாகிகள் நவாப்ஜான், முபாரக், சுரேஷ், காமராஜ், ஜெயலட்சுமி, முனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரிதாரிமங்கலம் ஆதிதிராவிடர் மக்கள் வாழும் தெருக்களுக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும், இறையூர், நயம்பாடி, காரப்பட்டு கூட்டுரோடு, புதுப்பாளையம் சந்தை மேடு ஆகிய இடங்களில் உள்ள, பேருந்து நிலையத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும், அரிதாரி மங்கலம் தலித் மக்களுக்கு சுடுகாடு அமைக்கவும், அந்த சுடுகாட்டிற்கு பாதை அமைக்கவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், புதுப்பாளையம் ஒன்றியத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும், புதிய வேலை அட்டை வழங்க வேண்டும், சட்ட கூலி 229 குறையாமல் வழங்கிடவும், பணித் தளத்தில் குடிநீர், நிழற்கூடம், குழந்தை பராமரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தவும் வேண்டும். வறட்சி காலத்தில், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, தினக்கூலியாக ரூ 400 வழங்க வேண்டும். அனைத்து ஊராட்சி களிலும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.