சிதம்பரம், மே 20 - குமராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மற்றும் தனியார் வங்கிகளில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன் தவணையை செலுத்த காலநீட்டிப்பு வழங்க வேண்டும். விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் செல்வ காந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.