குளித்தலை, செப்.11- கரூர் மாவட்டம் குளித்தலை நக ராட்சி 9-வது வார்டு புது கோர்ட் தெரு, வாய்க்கால் மேடு பகுதியில் கழிப்பிட வசதி கேட்டு, பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குளித்தலை காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாக சென்று குளித்தலை நக ராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், குளித்தலை நக ராட்சி 9-வது வார்டு பகுதியில் வாய்க் கால் மேடு புது கோர்ட் தெரு பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் குடும்பத் துடன் வசித்து வருகிறோம். இப்பகுதி யி்ல் அனைவரும் திறந்த வெளியில் உபாதைகளை கழிக்கும் அவலம் உள்ளது. மேலும் மழைக்காலங்களில் ஆண்கள் - பெண்கள் இயற்கை உபா தைகளை கழிப்பதற்கு இடம் இல்லா மல் மிகவும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். திறந்த வெளியை பயன் படுத்துவதால் பல்வேறு தொற்று வியாதிகள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி வாய்க்கால் மேடு பகுதியில் தனிநபர் கழிப்பிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்து புதி தாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தனர். கோாிக்கை மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் பொது மக்கள் கோாிக்கை வைத்துள்ள இடத்தை பார்வையிட்டு புதிதாக கழிப்பிடம் கட்ட வசதியான இடத்தை தேர்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.