திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- மாற்றுத்திறனாளி களுக்கு கொரோனா ஊர டங்கு வாழ்வாதார நிவார ணமாக ரூ.5000 வழங்க க்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு மாந கர் மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமை வகித்தார். சோமர சம்பேட்டை ஆர்.ஐ.அலுவல கம் முன்பு மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோ க்கியராஜ் தலைமையிலும், மணிகண்டம் ஆர்.ஐ. அலு வலகம் முன்பு மணிகண்டம் ஒன்றிய தலைவர் குமார் தலைமையிலும், ஜீயபுரம் ஆர்.ஐ.அலுவலகம் முன்பு அந்தநல்லூர் ஒன்றிய தலை வர் புவனேஸ்வரி தலைமை யிலும், குழுமணி ஆர்.ஐ. அலுவலகம் முன்பு அந்த நல்லூர் ஒன்றிய பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. தொட்டி யம் தொட்டியத்தில் சங்கத் தலைவர் நமச்சிவாயம் தலை மையில் நடைபெற்றது.
கும்பகோணம்
திருபுவனம் அம்மா சத்திரம் பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர்கள் சுகு மார், சேகர், வாசுதே வன், சரவணன் உள்ளி ட்டோர் தலைமை வகித்தனர். மன்னார்குடி முத்து ப்பேட்டை ஒன்றிய மாற்றுத்தி றனாளிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு உத யமார்த்தாண்டபுரம் கிராம நிர்வாக அலுவலரிடம் அளிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் வி.ராஜலட்சுமி தலைமை வகித்தார்.