districts

img

தனியாரின் ஆதரவற்றோர் இல்லங்களை அரசே ஏற்று நடத்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

பழனி,பிப்.19- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  அன்புஜோதி ஆதரவற்றோர் ஆசிர மத்தில் தங்கிய ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பல மாற்றுத்திறனாளி கள் பல ஆண்டுகளாக பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள் ளனர். மனித உரிமை மீறலில் ஈடு பட்ட காப்பக நிர்வாகிகள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்.  மாநிலம்  முழுவதும் தனியார் வசம் உள்ள பல  மனநல காப்பகங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தனியார் வசம்  உள்ள மனநல மற்றும் ஆதரவற்றோர் காப்பகங்கள் அனைத்தையும் தமிழக  அரசே ஏற்று நடத்த வேண்டும்.பழனி யில் ஆமை வேகத்தில் நடைபெறும் மன நல காப்பக வேலைகளை உடனடியாக விரைவுபடுத்தி,காப்பகத்தை  திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பழனி யில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்  றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்  போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பிப்ரவரி 18 அன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. பழனி தாராபுரம் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா ஹாஸ்டல் முன்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பழனி நகரச்செயலாளர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத்  சிங் உரையாற்றினார். பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலக் குமார், பழனி நகர பொருளாளர் அய்ய னார் உள்பட பலர் பங்கேற்றனர்.