திருச்சிராப்பள்ளி, மார்ச், 16, மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பை சுழற்சி முறையில் வழங்காமல் தொடர்ச்சியாக முழுச் சம் பளத்துடன் வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அரசு இலவசமாக வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவெறும்பூரில் புறநகர் மாவட்டப் பொருளாளர் சித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மல்லிகா, சங்க ஒன்றியத் தலைவர் செல்வ மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். தொட்டியத்தில் ஒன்றியச் செயலாளர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புறநகர் மாவட்ட தலைவர் ரவி உட்பட பலர் பங்கேற்றனர். தா.பேட்டையில் ஒன்றியத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலை வர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர். மணப்பாறையில் துணைச் செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஒன்றியச் செயலாளர் வேணுகோபால் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். லால்குடியில் ஒன்றியத் தலைவர் ஜெக தீசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் மாவட்டச் செயலாளர் ரஜினிகாந்த் சிறப்புரையாற்றினார். புள்ளம்பாடியில் ஒன்றியத் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கோமதி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.